Categories
அரசியல்

விளைவுகளை சந்திக்க நேரிடும்…. சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம்….!!!

அனைத்து மாநிலங்களின் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு தி.மு.கவின் எம்.பி. பி வில்சன் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மூத்த வழக்கறிஞராக இருக்கும் பி.வில்சன்  சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், அனைத்து மாநிலங்களை சேர்ந்த தலைமை செயலாளர்கள், மத்திய அரசின் கல்வித் துறை அமைச்சர், சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் போன்றோருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில் பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக் கல்லூரிகள் அனைத்திலும் இட ஒதுக்கீட்டை சரியாக கடைபிடிப்பது அரசியலமைப்பு சட்டத்தின் கட்டாயம் என்று முன்பு எழுதியிருந்த கடிதத்தை குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், அந்த கடிதத்தில் கொச்சி மற்றும் லக்னோவில் இருக்கும் தேசிய சட்ட பள்ளிகளில் மாநில இட ஒதுக்கீடு முறையை, கடைப்பிடிப்பதாக தெரிவித்திருப்பதாகவும், ஆனால் பிற மாநிலங்களில் இருக்கும் சட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய சட்ட பள்ளிகளில் ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி போன்ற பிரிவினர்களுக்கு அரசியலமைப்பு சட்ட இட ஒதுக்கீடு மற்றும் மாநில இட ஒதுக்கீடு சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை என்று தெரியவந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு சட்டப் படிப்பில் தகுந்த வாய்ப்பு வழங்க அகில இந்திய ஒதுக்கீடானது, மாநில அரசின் தகுந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறார். சரியான இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் இருந்தால், சட்ட ரீதியாக விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |