Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் அடுத்த பாகிஸ்தான் தூதர்… அவர் வேண்டாம்… நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்…!!!

அமெரிக்க நாட்டிற்கான பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் மசூத் கானை நிராகரிக்க வேண்டும் என்று அதிபர் ஜோ பைடனை நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியிருக்கிறார்.

பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான் கானின் நிர்வாகம் தேர்ந்தெடுத்திருக்கும் மசூத் கான், தீவிரவாதத்தை புகழ்ந்து பேசக்கூடியவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருக்கிறார். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்காட் பெர்ரி, அதிபர் ஜோ பைடனுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மசூத் கானை தேர்ந்தெடுத்ததற்கு அனுமதி வழங்குவதை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் நிறுத்தி வைத்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.

அது வரவேற்கக்கூடியது. எனினும், நிறுத்தி வைத்திருந்தால், போதாது. அவரை தேர்ந்தெடுத்ததை நிராகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |