அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி Tulsi Gabbard பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அந்த வகையில், அந்நாட்டின் ஜனநாயக கட்சியில் எம்.பி பதவியில் இருந்தவர் Tulsi Gabbard.
இன்னிலையில், திடீரென்று அவர் எம்.பி பதவியை விட்டு தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார். மேலும், ஜனநாயக கட்சியில் இன வெறியும், போர் வெறியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.