இந்தியன் பிலிம் ஃபெஸ்டிவல் மெல்போர்ன் 2021 சிறந்த நடிகருக்கான விருதை வென்ற நடிகர் சூர்யாவிற்கு திமுக எம்.பி சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்..
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று‘. சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்தது.
இந்நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சூர்யா சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறந்த படமாக சூரரைப்போற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலை விருதுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நடிகர் சூர்யாவிற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. அதில், மெல்போர்னின் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிப்புக்கான நடிகர் விருதை சூரரை போற்று திரைப்படத்திற்காக சூர்யா வென்றிருக்கிறார். நிஜ வாழ்விலும் நேர்பட பேசி ரௌத்திரம் பழகும் அசலான சூரனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்..
மெல்போர்னின் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிப்புக்கான நடிகர் விருதை சூரரை போற்று திரைப்படத்திற்காக சூர்யா வென்றிருக்கிறார். நிஜ வாழ்விலும் நேர்பட பேசி ரௌத்திரம் பழகும் அசலான சூரனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்! @Suriya_offl pic.twitter.com/9gyayJr8i2
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 20, 2021