கனடாவில் சட்டபூர்வமாக நடந்த கூட்டத்தின் நேரலையின் போது ஆளும் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பல்வேறு நாடுகளில் நாடாளுமன்ற அவை கூட்டங்கள் காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது. அதன்படி கனடாவில் சட்டபூர்வமாக கூட்டம் ஒன்று நேரலையில் நடைபெற்றுள்ளது. அப்போது ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், William Amos தேநீர் பாத்திரத்தில் சிறுநீர் கழித்துள்ளார்.
இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவர் தான் கடந்த வாரமும் நேரலையில் ஆடையின்றி நிர்வாணமாக வந்து அனைவரையும் முகம் சுழிக்க வைத்தார். ஆனால் Amos அந்த இரண்டு நிகழ்வுகளும் எதிர்பாராமல் நடந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் கேமரா இயக்கத்திலிருந்ததை நான் பார்க்கவில்லை, என்றும் தன் செயல்பாடுகள் பிறரை வருத்தமடையச் செய்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் நாடாளுமன்ற செயலாளராக தன் முழு பொறுப்பிலிருந்தும், தற்காலிகமாக விலகுவதாக தெரிவித்திருக்கிறார்.