Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழில் முழக்கமிட்ட MP” தவறாக எழுதலாமா தமிழை….வைரலாகும் ட்வீட் பதிவு …!!

தமிழில் முழக்கமிட்டு தமிழை தவறாக எழுதிய தமிழக MP ட்வீட் வைரலாகி வருகின்றது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. வெற்றிபெற்ற தமிழக MP_க்கள் மக்களவை பதவி ஏற்பு விழாவில் தமிழில் முழக்கங்கள் எழுப்பி பதவி ஏற்றுக் கொண்டது அரசியல் விவாதமாக மாறியது. மேலும் தமிழக MP_க்கள் முழக்கத்திற்கு எதிராக பிஜேபி_யினர் ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கமும் எழுப்பினார்கள்.

இந்நிலையில் திமுக சார்பில் தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  செந்தில் குமார்  இன்று தனது ட்வீட்_டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில் உலக கோப்பை போட்டி நடைபெற்ற மைதானத்தில் ரசிகர் ஒருவர் “தமிழ் வாழ்க” , தந்தை பெரியார் வாழ்க என்ற வாசகத்தை கையில் வைத்து இருந்த புகை படத்தை பதிவிட்டிருந்தார்.

 

மேலும் அந்த ட்வீட்_டில் இது போன்று ரசிகர்கள் கையில் வைத்திருப்பதை ஆதரிக்கின்றேன் என்றும் ,  , , , . என்று தவறாக பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளத்தில் வைரலாகியது. மேலும் சிலர் இதை சரியாக பதிவிடவும் என்று சுட்டிக்காட்டிய பின்பு ஓங்குக என்று மாற்றினார்.

Categories

Tech |