விஜய் டிவியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் Mr. and Mrs சின்னத்திரையும் ஒன்று. இதனுடைய நான்காவது சீசன் தற்போது நடந்து முடிந்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்த பைனல் போட்டியில் ஒவ்வொரு ஜோடியும் கடுமையாக போட்டியிட்டனர்.
இந்நிலையில் பைனல் போட்டியில் கடுமையாக போட்டியிட்ட Mr and Mrs சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சியில் மகாலிங்கம்-ராஜேஸ்வரி டைட்டில் வின்னர் ஆகியுள்ளனர். அது மட்டுமில்லாமல் ரூ.3 லட்சம் வெற்றி தொகையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதன்-ரேஷ்மா ஜோடி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளனர். மேலும் ஃபரீனா-ரஹ்மான் மற்றும் வசந்த்-ரேகா ஜோடிகள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.