Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியிலிருந்து விலகியது குறித்து மணிகண்டன்- சோபியா ஜோடி விளக்கமளித்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் தேவதர்ஷினி மற்றும் கோபிநாத் இருவரும் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். மேலும் வினோத், திவாகர், மணிகண்டன், சரத், மைனா நந்தினி, தீபா, காயத்ரி உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்க்கைத் துணையோடு இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சிறப்பாக விளையாடி வந்த மணிகண்டன்- சோபியா ஜோடி திடீரென இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளனர். தற்போது இதுகுறித்து சோபியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் ‘எனக்கு சில உடல்நல பிரச்சனைகள் உள்ளது. மருத்துவர்கள் என்னை ஓய்வு எடுக்கச் சொல்லி அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனால் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டோம். கண்டிப்பாக வைல்ட் கார்ட் சுற்றில் மீண்டும் வருவோம்’ என தெரிவித்துள்ளார்.