Mr & Mrs சின்னத்திரை 3 நிகழ்ச்சியில் பிரபல நடிகையின் அண்ணன், அண்ணி இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று Mr & Mrs சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் தங்களது நிஜ ஜோடிகளுடன் கலந்து கொண்டு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை விளையாடுவார்கள். இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 ஆரம்பமாகியுள்ளது.
இதில் 8 திருமண ஜோடிகள் கலந்து கொள்ள உள்ளனர் . மேலும் இந்த சீசனை தொகுப்பாளர் மாகாபாவுடன் இணைந்து தொகுப்பாளினி அர்ச்சனாவும் தொகுத்து வழங்குகிறார் . இந்நிலையில் இந்த சீசனில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன், அண்ணி இருவரும் ஜோடிகளாக கலந்து கொண்டுள்ளனர் . அவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.