இந்தியாவில் முன்னணி நிறுவனம் ஆக ரிலையன்ஸ் நிறுவனம் விளங்கி வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் தொலைத் தொடர்பு துறை, ஸ்மார்ட்போன்கள், ஆடைகள், இரும்புப் பொருட்கள், சிம்கார்டுகள், வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் என மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய அனைத்து துறைகளிலும் இயங்கி வருகிறது. இந்நிலையில் MRP-யை விட கூடுதல் விலைக்கு உள்ளாடையை விற்பனை செய்த ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ், ரூபாய்.2,10,000 இழப்பீடு வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ரூபாய்.260க்கு விற்கப்படவேண்டிய உள்ளாடைகளை ரூ.278க்கு விற்றதாக சிவபிரகாசம் என்பவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், தமிழ்நாடு மாநில நலநிதிக்கு ரூபாய்.2 லட்சமும், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூபாய்.10 ஆயிரத்தையும் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.