Categories
கிரிக்கெட் விளையாட்டு

பெஸ்ட் ஐபிஎல் லெவன் அணியை உருவாக்கிய ஹாக்… ஆனால் தோனிக்கு… இதோ இடம்பிடித்தவர்கள் இவர்கள் தான்..!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் உருவாக்கிய ஐபிஎல் லெவன் அணியில் எம்எஸ் தோனிக்கு இடம் கிடைக்கவில்லை.. 

13ஆவது ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ளன.. இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்று அனைத்து அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு அணியின் பயிற்சியாளர்களும் தங்கள் அணிகளுடன் பல விதமான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றனர்..

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மிகவும் தாமதமான காரணத்தால் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விமர்சகர்களும் தங்களுக்கு பிடித்தவர்களை வைத்து ஐபிஎல் லெவன் அணியை உருவாக்கி வருகின்றனர்.. யார் அணியை உருவாக்கினாலும் அதில் முக்கியமாக எம்.எஸ் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு அதில் இடம் கிடைக்கும்..

ஆனால் முன்னாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளருமான பிராட் ஹாக் தனக்கு பிடித்த ஐபிஎல் லெவன் அணியை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார்.. அந்த அணியில் முக்கிய வீரர்கள் மற்றும் ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் எம்.எஸ் தோனிக்கே அதில் இடமில்லை என்று சொல்லி விட்டார் ஹாக்..

தோனி இல்லாமல் அவர் உருவாக்கிய 11 வீரர்கள் கொண்ட அணியை பார்ப்போம்.. மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் துவக்க வீரர்களாகவும், 3-ஆவது இடத்தில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியும், 4-ஆவது இடத்தில் கேன் வில்லியம்சனையும் தேர்வு செய்துள்ளார்.. 5-ஆவது இடத்தில் தான் தோனிக்கு பதில் இளம் வீரர் ரிஷப் பண்ட் ஐ தேர்வு செய்துள்ளார்..

6ஆவது இடத்தில் ஆண்ட்ரே ரஸல், சுழற்பந்து பந்து வீச்சாளராக ஜடேஜா, கொல்கத்தா அணியின் சுனில் நரைன், பெங்களூர் அணியின் யூஸ்வேந்திரா சாஹல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சாளரான மும்பை அணியின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சன்ரைசர்ஸ் அணி வீரர் புவனேஷ்வர் குமார் ஆகியோரை மட்டுமே தேர்வு செய்துள்ளார்.. தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டை  தேர்வு செய்துள்ளார்.

பிராட் ஹாக் தேர்வு செய்த ஐபிஎல் அணி இதோ :

1. டேவிட் வார்னர்,

2. ரோகித் சர்மா,

3. விராட் கோலி,

4. கேன் வில்லியம்சன், (கேப்டன்)

5. ரிஷப் பண்ட்

6. ஆண்ட்ரே ரசெல்,

7. ரவீந்திர ஜடேஜா,

8. சுனில் நரேன்,

9. சாஹல்,

10. புவனேஷ் குமார்,

11 .ஜஸ்பிரிட் பும்ரா

Categories

Tech |