Categories
கிரிக்கெட் விளையாட்டு

எம்.எஸ்.தோனி- யுவராஜ் சிங் திடீர் சந்திப்பு …! இணையத்தில் வைரல் ….!!!

தோனியுடன் யுவராஜ் சிங் அமர்ந்து உரையாடிக் கொண்டிரும்வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

சர்வதேச போட்டிகளில் கிரிக்கெட் களத்தில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட தோனி-யுவராஜ் சிங் ஜோடியை மீண்டும் களத்தில் பார்ப்பது சாத்தியமற்ற நிகழ்வு .இந்நிலையில் இருவரும் சமீபத்தில் ஒரு விளம்பர ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்தபோது சந்தித்துக்கொண்டனர். இந்த வீடியோவை யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்  டோனியுடன் ,யுவராஜ் சிங்  அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் .

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதுவரை யுவராஜ் சிங் , தோனியின் தலைமையின் கீழ் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார் .குறிப்பாக கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அதோடு இந்தியா கோப்பையை வெல்வதற்கு  யுவராஜ் சிங்கின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும் .இதனால் 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |