எம்எஸ் தோனியின் அறிவுரை ,எனக்கு மிகவும் உதவியாக இருந்தது ,என்று கிரிக்கெட் வீரர் டி நடராஜன் தெரிவித்தார்.
எம்எஸ் தோனியுடன் பழகும் அனைத்து வீரர்களும் ,அவரைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். ஏனெனில் தோனி ,அவர்களிடம் உள்ள சிறப்புத் தன்மையை பற்றி , ஆலோசனை வழங்குவார். அந்த வகையில் தற்போது ,இந்திய கிரிக்கெட் வீரரான , தமிழகத்தைச் சேர்ந்த டி நடராஜன் ,எம்எஸ் தோனி பற்றி தெரிவித்துள்ளார். அவர் தோனியை பற்றி கூறும்போது, தோனி போன்ற ஜாம்பவானிடம் பேசிக்கொண்டிருப்பது ,எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது. என்னிடம் அவர் பிட்னஸ் பற்றி பேசி, என்னை ஊக்கப்படுத்தினார்.
அதோடு என்னுடைய பந்துவீச்சில், ஸ்லோ பவுன்சர், கட்டர்ஸ் மற்றும் பந்துகளின் வித்தியாசத்தைப் பற்றியும் ,அதை எப்படி பயன்படுத்தும் முறையை பற்றி ,அவர் எனக்கு கூறியுள்ளார். அவர் கற்றுக் கொடுத்தது ,எனக்கு உதவியாக இருப்பதாக டி நடராஜன் கூறினார்.கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபில் போட்டியில், ஐதராபாத் அணியில் விளையாடிய நடராஜன்,சிறப்பாக பவுலிங் செய்ததன் மூலமாக ,தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த, 3 தொடர் போட்டிகளிலும் டி நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்தது குறிப்பிடத்தக்கது .