சென்னை கோடம்பாக்கம் அருகே அதிக விலைக்கு சனிடைசர் விற்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது 144 தடை உத்தரவால் நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றை வாங்க மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில்,
மருந்துக் கடைகளில் சனிடைசர் முககவசம் உள்ளிட்டவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில், கோடம்பாக்கத்தில் கார்த்திகேயன், நிஜாம் ஆகிய இரு நபர்கள் சனிடைசர் மற்றும் முக கவசங்களை அருகில் உள்ள மருந்து கடையிலிருந்து முழுவதுமாக வாங்கி வீட்டில் வைத்து வாட்ஸ்அப் மூலம் அதிக விலைக்கு விற்று கொண்டிருக்கின்றனர். இதனை அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1,500க்கும் மேற்பட்ட சனிடைசர், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.