Categories
பல்சுவை

MTNL ப்ரீபெய்ட் திட்டம்: ரூ.225-க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்…. வாழ்நாள் வேலிடிட்டி…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஸ்மார்ட்போனின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடிஆகும் காலமானது குறைவாக இருப்பதனால், அதனை ஈடுகட்ட ஒரு புது திட்டம் சந்தையில் வந்திருக்கிறது. இவை உங்களுக்கு லைப்டைம் செல்லுபடி ஆகும். இத்திட்டம் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டுவதாக இருக்கிறது. 225 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் வாழ்நாள் வேலிடிட்டி கிடைக்குமாம். ஏர்டெல், ஜியோ, வோடா போன் என அனைத்து நிறுவனங்களும் இத்திட்டத்தைப் பார்த்து அரண்டு போயுள்ளனர்.

உங்களது ரீசார்ஜ் காலம் முடிந்து விட்டால் உங்களின் அனைத்து சலுகைகளும் முடிவடையும். ஆனால் தற்போது சந்தையில் ஒரு புது ரீசார்ஜ் திட்டம் வந்திருக்கிறது. அதனுடைய செல்லுபடி காலம் முடிவடையாது. இதன் பொருள், மலிவான விலையில் வாழ் நாள் செல்லுபடி ஆகும் ரீசார்ஜ் திட்டம் இது. இத்திட்டம் குறித்து பலருக்கு தெரியவில்லை. நீங்களும் இதனைப் பயன்படுத்தி, லைப்லாங் வேலிடிட்டி பெற்றுக்கொள்ளலாம்.

லைப் டைம் வேலிடிட்டி திட்டம்:

MTNL வழங்கக்கூடிய இத்திட்டத்தில் ரூ.225க்கு ரீசார்ஜ் செய்யவேண்டும். அதன்பின் உங்களுக்கு லைப் டைம் வேலிடிட்டி கிடைக்கும். அத்துடன் சிம்கார்டு காலவதியாகிவிடுமோ என்ற கவலையும் இல்லை. இந்த திட்டம் உங்களுக்குப் பிடித்திருந்தால், உடனடியாக ரூ.225-க்கு ரீசார்ஜ்செய்து லைப் டைம் வேலிடிட்டி பெறலாம்.

இத்திட்டத்தில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது?

இத்திட்டத்திலுள்ள பயனர்களுக்கு 100 நிமிட அழைப்பு நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அத்துடன் இந்த திட்டத்தை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு குரல் அழைப்புக்கு வினாடிக்கு 0.02 பைசா வசூலிக்கப்படுகிறது. இது ஒருவகையில் சிக்கனமானதாக உள்ளது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு முழு வாழ்நாள் வேலிடிட்டியானது வழங்கப்படுகிறது. இது மிகப் பெரிய நன்மை என்பதோடு, சிம்கார்டு காலவதியாவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |