பிக் பாஸ் வீட்டில் ஆயிஷா உடம்பு சரியில்லாதது போல் நடிக்கின்றார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜீ தமிழில் சத்யா என்ற சீரியலில் ஹீரோயினியாக நடித்துள்ள ஆயிஷா பிக் பாஸ் சீசன் 6-ல் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
அதற்காக அவருக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது அதனையே காரணம் காட்டி அவர் போட்டிகளிலும் கலந்து கொள்வதில்லை. அதே சமயத்தில் கமல்ஹாசனுடன் பல கேள்விகள் எழும்பியது. மேலும் அசீம் பேச்சை கேட்டுக் கொண்டுதான் ஆயிஷா மோசமாக நடப்பதாக கமல் சார் கூறியுள்ளார். இதுகுறித்து பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களான அமுதவாணன், ஜனனி மற்றும் மாஸ்டர் பேசியதாவது, ” ஆயிஷா உடம்பு சரியில்லாதது போல் நடிக்கின்றார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்”.