மகாராஷ்டிராவில் மூடப்பட்டிருந்த கடையில் 8 மனித காதுகள், மூளைகள், கண்கள் மற்றும் சில உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மூடி வைக்கப்பட்டிருந்த கடையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கடையை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடையும் சம்பவமொன்று வெளிவந்தது. கடையை சோதனையிட்ட காவலர்கள் கூறியதாவது. “கடையை திறந்து பார்த்தபோது ஏராளமான பொருட்கள் கிடந்தன. அதில் ஒரு பிளாஸ்டிக் பெட்டியை திறந்து பார்த்தோம். அப்போது அதில் மனித உடல் உறுப்புகள் இருந்தன. இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்டு தடவியல் நிபுணர்கள் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கடையின் உரிமையாளரின் இரண்டு மகன்களும் மருத்துவத்துறையில் உள்ளனர். இதனால் உடல் பாகங்கள் மருத்துவ காரணங்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறதா. மேலும் சில உடல் பாகங்கள் ரசாயன கலந்த பாட்டில்களில் வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து உடல் உறுப்புக்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்பதால் மருத்துவ துறையில் இருப்பவர்கள் தான் இதை செய்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.