முடக்கத்தான் ரசம்
தேவையான பொருட்கள் :
முடக்கத்தான் கீரை – 1 கப்
புளி – நெல்லியளவு
உப்பு – தேவைக்கு ஏற்ப
பூண்டு – 4 பல்
காய்ந்த மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகு சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு
கடுகு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
முதலில் பூண்டுடன், மிளகாய் சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர் கீரையில் தண்ணீர் சேர்த்து வேக விட்டு வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதனுடன் புளிக் கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து
அரைத்த பூண்டு மிளகாய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி விட வேண்டும். மற்றொரு கடாயில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்துடன் கலந்தால் சூப்பரான முடக்கத்தான் ரசம் தயார் !!!