பிரபல காமெடி நடிகர் செந்தில் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்தவர் செந்தில் . இவர் பல திரைப்படங்களில் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இவர்கள் காமெடிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது . இதையடுத்து நடிகர் கவுண்டமணி ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டார் . ஆனால் நடிகர் செந்தில் இதுவரை எந்த ஒரு படத்திலும் கதாநாயகனாக நடித்தது இல்லை .
இந்நிலையில் முதல்முறையாக நடிகர் செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா அடுத்ததாக இயக்கும் படத்தில் செந்தில் கதாநாயகனாகிறார் . இந்த படத்தில் ஆயுள் தண்டனை கைதி கதாபாத்திரத்தில் நடிகர் செந்தில் நடிக்க உள்ளார் . மேலும் இந்தப் படத்தில் செந்திலுக்கு ஜோடியாக யாரும் இல்லை என கூறப்படுகிறது.