பிரபல தொகுப்பாளர் ரக்சன் பத்து வருடங்களுக்கு முன் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ரக்சன் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமடைந்தவர் . தற்போது இவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் . மேலும் இவர் சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் தொகுப்பாளர் ரக்சன் பத்து வருடங்களுக்கு முன் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார் . இதுவரை பலரும் ரக்சன் திருமணம் ஆகாதவர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர் . தற்போது முதல் முறையாக அவரது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.