முதியவர் மயங்கி விழுந்த உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் தாமிரபரணி ஆற்று பகுதியில் முதியவர் ஒருவரின் பிணம் கிடப்பதாக நெல்லை சந்திப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு கிடந்த பிணத்தை பார்வையிட்டனர். அதன்பின் காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பிணமாக கிடந்த முதியவர் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் வேலு என்பதும் அவர் வாத்து மேய்க்கும் தொழிலாளியான இவர் மயங்கி விழுந்து திடீரென இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.