Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணத்தை மீறிய உறவு… கண்டித்த மனைவி… ஓய்வு பெற்ற ஆய்வக உதவியாளர் எடுத்த முடிவு…!!

கோவையில் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் முதியவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்.இவர்  தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியத்துக்கு  அப்பகுதியில் உள்ள இரண்டு பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை பாலசுப்பிரமணியத்தின்  மனைவி கண்டித்துள்ளார். மேலும் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு ஈரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் மதுபோதையிலிருந்த சுப்பிரமணியம் நேற்று திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இரண்டு பெண்களுடன்  அவருக்கு கள்ள தொடர்பு இருந்ததால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு  தாய் வீட்டிற்கு சென்ற விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டார்  என்று தெரிவித்தனர்.

Categories

Tech |