Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவர்… மனமுடைந்து… எடுத்த விபரீத முடிவு…!!

உடல்நிலை சரியில்லாததால் முதிவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசாகவுண்டனுரை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் முழங்கால் வலி மற்றும் ஒரு கை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் மனவேதனையடைந்த லட்சுமணன் கடந்த 2ஆம் தேதி வீட்டில் இருந்த குருணை மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் லட்சுமணனை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் லட்சுமணனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |