வீட்டில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான வீட்டில் சேலம் பகுதியில் வசிக்கும் பொன்னுசாமி என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆதரவற்ற இவர் திருச்செந்தூர் பகுதிக்கு சென்று தர்மம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக பொன்னுசாமி நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இரவு தூங்கச் சென்ற பொன்னுசாமி மறுநாள் மதியம் வரை வெளியே வரவில்லை.
இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் கோபால் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பொன்னுசாமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்னுசாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.