Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் தங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கசாமியின் மனைவி கடந்த 15 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மனவருத்தத்தில் இருந்த தங்கசாமி கடந்த சில நாட்களாக சாப்பிடாமல் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென தங்கசாமி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் தங்கசாமியை உடனடியாக மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தங்கசாமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |