Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டில் யாருமில்லாத சமயத்தில்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மனக்காவலன்பிள்ளைநகர் பகுதியில் சுடலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுடலை வீட்டில் யாருமில்லாத சமயத்தில் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் சுடலையை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுடலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |