முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தெய்வச்செயல்புரம் பகுதியில் கெங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள பேருந்து நிலையம் பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கெங்கனின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.