Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த முதியவர்…. மிரட்டல் விடுத்த 2 நபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

முதியவரை மிரட்டி பணம் பறித்த ராணுவ வீரர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் மாசிலாமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள மதுக்கடை அருகில் பாட்டில்களை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாசிலாமணி வள்ளியூர் மதுக்கடை அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த வள்ளியூர் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் ராணுவ வீரரான நாகராஜன் ஆகிய இருவரும் வந்தனர்.

இந்நிலையில் 2 பேரும் மாசிலாமணியை மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்துள்ளனர். இதுகுறித்து மாசிலாமணி அப்பகுதியில் வந்த காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராணுவ வீரர் நாகராஜன் மற்றும் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |