முதியவரிடம் பணமோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பீட்டரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பின் பேசிய மர்ம நபர் ஒருவர் தான் ஒரு குறிப்பிட்ட வங்கியில் இருந்து பேசுவதாகவும், தங்கள் ஏ.டி.எம். கார்டு காலாவதி ஆகிவிட்டதால் அதனை புதுப்பிக்க வேண்டும். எனவே பீட்டரிடம் தனது ஏ.டி.எம். கார்ட் பின் நம்பரை தெரிவிக்கும் படி மர்மநபர் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய பீட்டர் அந்த மர்ம நபரிடம் தனது ஏ.டி.எம். பின் நம்பரை தெரிவித்துள்ளார்.
அதன்பின் பீட்டருக்கு சிறிது நேரம் கழித்து உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50,000 எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பீட்டர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரடியாக சென்று இதுகுறித்து கூறியுள்ளார். அப்போதுதான் பீட்டருக்கு பணம் மோசடி செய்யப்பட்ட விவரம் குறித்து தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பீட்டர் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.