புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் பார்சிலோனா அணியில் இருந்து நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வெளியேறியுள்ளார்.
அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஸ்பெயினின் பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த கோபா அமெரிக்க கால்பந்து கோப்பைக்கான போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 28 வருடங்களுக்குப் பிறகு வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதுவரை மெஸ்ஸி அந்த அணிக்காக 672 கோல்கள் அடித்துள்ளார் . அதோடு தனிப்பட்ட கிளப் அணிக்காக பீலே அடித்த 643 கோல் சாதனையை முறியடித்து மெஸ்ஸி புதிய சாதனை படைத்திருந்தார். அத்துடன் பார்சிலோனா அணிக்காக 34 டிராபிகளையும் பெற்றுத் தந்துள்ளார்.
LATEST NEWS | Leo #Messi will not continue with FC Barcelona
— FC Barcelona (@FCBarcelona) August 5, 2021
இந்நிலையில் பார்சிலோனா அணியிலிருந்து நெய்மர் வெளியேறியதிலிருந்து , மெஸ்சிக்கும் கிளப்புக்கு இடையே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது. இதனால் சென்ற வருடம் பார்சிலோனா அணியிலிருந்து மெஸ்ஸி வெளியேறுவதாக செய்திகள் வெளியாகியது.ஆனால் அணியுடன் ஒப்பந்தம் முடிவடையாததால் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் நீடித்தார் . இந்நிலையில் மெஸ்ஸியை தக்க வைத்துக் கொள்ள பார்சிலோனா அணி தயாராக இருந்தது .இதற்கான புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முயற்சியும் நடத்தியது . ஆனால் பொருளாதார மற்றும் கட்டமைப்பு காரணமாக ஒப்பந்தம் நிறைவேறாததால் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறுவதாக அந்த அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து.கடந்த 2000-ம் ஆண்டு பார்சிலோனா அணியில் இளம் வீரராக அறிமுகமான அந்த லியோனல் மெஸ்ஸி அணிக்காக 21 ஆண்டுகள் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.