இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் அவரது மனைவி ஆயிஷாவை விவாகரத்து செய்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான். இவர் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார் .சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இளம் படை இந்திய அணியை தவான் வழிநடத்தினார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஏற்கனவே திருமணமான ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இதில் முதல் திருமணத்தில் ஆயிஷாவுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், தவான் -ஆயிஷாவுக்கு பிறந்த ஆண் குழந்தையுடன் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் தவானும், மனைவி ஆயிஷாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .இது குறித்து மனைவி ஆயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இவர் வெளியிட்ட பதிவில்,” விவாகரத்து என்ற வார்த்தை அழுக்கானது.நான் இரண்டாவது முறையாக விவாகரத்து செய்ய இருக்கிறேன். நான் முதல் முறை விவாகரத்து செய்யும் போது மிகவும் பயந்தேன். தோல்வியடைந்ததாகவும் தவறான விஷயத்தை செய்வதாகவும் உணர்ந்தேன் .சுயநலக்காரியாகவும், அனைவரையும் காயப்படுத்தியதாகவும் உணர்ந்தேன். விவாகரத்து என்பது அவ்வளவு மோசமான வார்த்தை .இது மிகவும் கொடூரமானது” என்று அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .ஆனால் இதனை ஷிகர் தவான் உறுதிப்படுத்தவில்லை. தற்போது தவான் மனைவி ஆயிஷாவின் இந்தப்பதிவு இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.