இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 நாடுகள் பங்கேற்று நடத்திய கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட தேவையான முயற்சிகளை எடுப்பது தொடர்பான முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்க செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அந்நாட்டில் தலிபான்கள் தங்களுடைய ஆதிக்கத்தை மீண்டும் செலுத்தி வருகிறார்கள். மேலும் இவர்கள் ஆப்கானிஸ்தானிலுள்ள 15 க்கும் மேலான பகுதிகளை கைப்பற்றி தங்களுடைய ஆதிக்கத்தை அங்கு செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானிலுள்ள பல பகுதிகளை கைப்பற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவத்தின் உளவு துறை கூறியதாவது, ஆப்கானிஸ்தானில் இவ்வாறு தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வந்தால் இன்னும் ஓரிரு காலங்களில் அந்த நாட்டை முழுவதுமே அவர்கள் தங்களுடைய பிடிக்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்று கணித்துள்ளது.
இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 நாடுகள் பங்கேற்று கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. அந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பான முயற்சிகளை எடுப்பதற்கு முடிவு செய்துள்ளதாக அமெரிக்க செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி முனையில் ஆட்சி அமைவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.