Categories
உலக செய்திகள்

மண்ணுக்கடியில் மொத்தமாக புதைந்த வீடுகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

ஜப்பானில் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மொத்தமாக மண்ணுக்கடியில் புதைந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோக்கியோ நகரிலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அட்டாமி என்ற நகரத்தில் கடந்த வாரத்தில் கனத்த மழை பெய்திருக்கிறது. இதனால் கடந்த சனிக்கிழமை அன்று நிலச்சரிவு ஏற்பட்டு பலர் பலியாகினர். இதில் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. மேலும் 200 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பயங்கரமான நிலச்சரிவில் வீடுகள் மொத்தமாக மண்ணுக்கடியில் புதைந்த வீடியோ காட்சிகள் இணையத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. இதனிடையே இந்த நிலச்சரிவில் மாட்டிக்கொண்ட நபர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |