கொரோனா வரும் வரை ஒன்றும் தெரியாது வந்த பின்பு தான் அதன் வலி தெரியும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள பழங்குடிகள் நடமாடும் நியாய விலை கடையை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் அரசு விழாக்களை நடத்தினால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதாலேயே விழாக்கள் நடத்துவதைத் தவிர்த்து வருவதாக கூறினர். முக கவசம் அணியாமல் இருந்தால் கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.