Categories
மாநில செய்திகள்

முகக்கவசம் மூலம் 31 கோடி வசூல்… மும்பை அரசு அதிரடி…!!!

மும்பை மாநகராட்சியில் முகக்கவசம் அணிய அவர்களிடம் 31 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மிக வேகமாக இருந்தது. எனவே நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது.கொரோன தொற்று பாதிப்பு பரவாமல் இருக்க பல நிபந்தனைகளை அரசு விதித்தது. அதில் முக்கியமான ஒன்று முகக் கவசம் அணிதல். இந்நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநில அரசு கூறியது. பல மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பது அவசர சட்டமாக பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பல மாநிலங்களில் பொதுமக்கள் அதனை கடைபிடிக்கவில்லை.

எனவே பெரும்பாலான மாநிலங்களில் மாஸ்க் அணியாமல் செல்லும் அனைவருக்கும் ரூபாய் 1000 அபராதமாக  விதித்தனர். கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த மாநிலமான மகாராஷ்டிராவில் குறிப்பாக மும்பை மாநகராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களிடம் மக்களுக்கு கட்டாயம் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. மும்பை பெருநகர் மாநகராட்சி சார்பில் மும்பையில் மட்டும் முகக்கவசம்  அணியாமல் சென்றவர்களிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இப்போது வரை 30, 96, 21, 200 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Categories

Tech |