Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எத்தனை தடவை சொல்றது… விதிமுறையை மீறினால் இப்படிதான்… எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்…!!

முகக்கவசம் அணியாத 400 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

தமிழகத்தில் பரவிவரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.  மேலும் இந்த விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஊரடங்கின் கட்டுப்பாடுகளை மீறி வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதமும் வசூலித்தனர். மேலும் காவல்துறையினர் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றித்  திரிந்த 400 பேருக்கு அபராதம் விதித்ததோடு  கொரோனா கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை எடுத்து கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |