Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகம் பளிச்சென்று சிவப்பழகை பெற அருமையான டிப்ஸ்..!!

 பளிச்சென்ற சிவப்பழகு பொலிவை பெறுவதற்கு சில அருமையான டிப்ஸ் பார்ப்போம்.

நம் மண்ணின் அடையாளமான நிறமே கருப்புதான். ஆனால் பலரும் சிவப்பு நிறத்தைதான் விரும்புகிறார்கள். எந்த நிறமாக இருந்தாலும் சருமம் பளிச்சென்று இருப்பதுதான் பேரழகு.

முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி புத்துணர்வுடன் கூடிய அழகை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர்,  1/2 ஸ்பூன் பார்லி பவுடர், பால் கலந்து முகத்தில் தேய்த்து கொள்ளுங்கள். ஒரு 15 நிமிடம் வரை முகத்தில் அப்படியே வைத்திருந்து பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் சருமம் பொலிவுபெறும்.

உலர்ந்த திராட்சை 10 அதுவும் வெண்ணீரில் ஊற வைத்திருக்க வேண்டும். கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் இரண்டு, அதன் பிறகு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். அதோடு இதனுடன் கொஞ்சம் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போட்டு கொள்ள வேண்டும்.   20 நிமிடங்கள் கழித்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரினால்  வேண்டும்.

கோதுமை மாவில் சிறிதளவு வெண்ணெய்யை கலந்து முகம் மற்றும் கழுத்தைச் சுற்றிப் பூசி விடுங்கள். அவை நன்கு ஊறிய பின் 20 நிமிடங்கள் கழித்துக் குளியுங்கள்.  இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்தால் முகம் மற்றும் கழுத்தில் இருக்கக்கூடிய கருமை விரைவில் நீங்கிவிடும். சிலபேருக்கு முகம் பளிச்சென்று தான் இருக்கும். ஆனால் கண்ணிற்கு கீழே கருவளையம் அழகை கெடுக்கும் விதமாக இருக்கும்.

இதற்கு காரணம் இரவில் சரியான தூக்கம் இல்லாமல் போவது தான் கருவளையம் தோன்றுவதற்கு காரணம் ஆகும். தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூக்கம் தேவை. தூங்குவது அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. கருவளையத்தை போக்குவதற்கு முதலில் வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து விழுதாக அரைத்து கொள்ளுங்கள்.

அதை ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையையும் வைத்து சிறிது நேரம் படுக்க வேண்டும். இவ்வாறு 30 நிமிடம் வரை இருப்பது அவசியம். தக்காளி, ஆப்பிள், மற்றும் தர்பூசணி போன்றவை விழுதாக்கி கொண்டு, பின்னர்  சம அளவு எடுத்து, பஞ்சில் நனைத்து முகத்தில் லேசாக தடவி எடுத்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் எளிதில் நீங்கிவிடும். சருமமும் பொலிவுடன் காணப்படும்.

Categories

Tech |