குறைதீர்க்கும் முகாமில் 130 மனுக்களுக்கு அதிகாரிகள் தீர்வு கண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தக்கலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது தீர்வு காணலாம் என்று குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் புகார் மனுக்கள் குறித்து மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களிடம் விசாரணை நடத்தி தீர்வு கண்டனர். மேலும் இந்த முகாமில் இன்ஸ்பெக்டர்கள் நெப்போலியன், ஷேக் அப்துல் காதர், பாலமுருகன், எழில், அரசி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.