Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முகநூலில் பதிவிட்ட புகைப்படம் …. பெண்ணின் பரபரப்பு புகார்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆரைக்குளம் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 – ஆம் தேதி முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அந்த பெண்ணின் புகைப்படத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரது அனுமதியின்றி முகநூலில் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட நபர் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திருமலைசாமிபுரம் பகுதியில் வசிக்கும் சிவ பாலாஜி என்பது தெரியவந்துள்ளது. அதன்பின்  முன்னீர்பள்ளம் காவல்துறையினர் சிவ பாலாஜியை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |