Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகப்பரு, கரும்புள்ளிக்கு நிரந்தர தீர்வு.. வாழைப்பழத்தின் மகிமை..!!

முகத்தில் ஏற்பட்டிருக்கும் பருக்கள் மற்றும் கரும்புள்ளி மறந்து பொலிவு ஏற்படுவதற்கு வாழைப்பழம் சிறந்த பொருளாக விளங்குகிறது.

அனைத்து பெண்களும் பெரும்பாலும் சந்திக்கக்கூடிய பெரிய பிரச்சனை சருமம் சார்ந்ததுதான். முக்கியமாக முகத்தில் கரும்புள்ளி, தழும்புகள், முகப்பரு ஆகியவற்றை அழகை கெடுத்து விடுகின்றன. இப்படி உண்டாக கூடிய அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வதற்கு வாழை பழம் சிறந்த பொருளாகும்.

தேவையானவை:

வாழை பழம்          –  பாதி அளவு
மைதா மாவு           – ஒரு டீஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள்  –  1/4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு  –  அரை ஸ்பூன்

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் பாதி அளவில் வாழை பழத்தை எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு நன்றாக மசித்து கொள்ளவேண்டும். பின்னர் அதோடு மைதா மாவு, அல்லது கோதுமை மாவு ஆகியவற்றையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு கஸ்தூரி மஞ்சள், எலுமிச்சை சாறு இவைகளையும் கலந்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது ஃபேஸ் பேக் தயார் செய்துள்ளோம்.

இதை பயன்படுத்துவதற்கு முன்னர், 5 நிமிடம் வரை ஆவி பிடித்து கொள்ளுங்கள்.  அதன் பிறகு முகத்தை அழுத்தமாக துடைத்து விட்டு,  தயாரித்து வைத்திருக்கும் வாழைப்பழ ஃபேஸ் பேக்கினை முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இதுபோல் வாரம் இரண்டு முறை செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் அனைத்தும் மறைந்து சருமம் பளபளப்பாக மற்றும் பொலிவுடன் வெள்ளையாக மாறிவிடும்.


பொலிவிழந்த சருமம் சில பேருக்கு எப்பொழுதும் காணப்படும். அவ்வாறு பிரச்சனை உள்ளவர்கள் பாதியளவு வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். பின்னர் முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.

இதேபோல் வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்க கூடிய கருமைகள் மறைந்து,விடும். வெயிலின் தாக்கத்தினால் சருமம் வறட்சி அடைந்து விடும். இவ்வாறு ஏற்படும் சரும வறட்சி பிரச்சனையை சரி செய்வதற்கு வாழைப்பழம் சிறந்த ஃபேஸ்பேக்காக பயன்படும். இதற்காக கடைகளில் விற்கப்படும் கண்டகண்ட ஃபேஸ்வாஷினை பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.

இதை செய்வதற்கு முதலில் ஒரு பவுல் எடுத்து கொள்ளுங்கள். அதில் பாதியளவு வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக மசித்து கொள்ளுங்கள். பின்னர் அத்துடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கினை முகத்தில் நன்றாக அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள். பிறகு 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி விடுங்கள்.

இந்த முறையை தினமும் செய்து வாருங்கள் அல்லது வாரம் இரண்டு முறை கூட நீங்கள் செய்யலாம். இப்படி செய்வதினால் சரும வறட்சி நீங்கி, மென்மையாக மற்றும் பொலிவுடன் காணப்படும்.

Categories

Tech |