நமது முகத்தில் உள்ள பருக்களை எவ்வாறு தடுப்பது? எப்படி தவிர்க்கலாம்?
பவுடர் மற்றும் அழகு சாதன கிரீம்கள் ஆகியவை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு மிகவும் அவசியம். தினமும் காலையில் 7 முதல் 8 மணி வரை சன்பாத் எடுக்க வேண்டியது முக்கியம்.
முகத்தில் பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை தான் உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை நாம் உண்ணும் உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
கீரைகள் ,பச்சைக் காய்கறிகளை நிறையச் சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.
கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகள், நெய், வெண்ணெய், கேக், ஐஸ்கிரீம், சாக்லேட், பாலாடை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
பருக்களைக் கிள்ளவோ, அழுத்தவோ கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், கடைகளில் கிடைக்கும் எந்தவித வாசனை சோப்புகளையும், லோஷன்களையும் பயன்படுத்தக் கூடாது.
முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்திடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயனத் தன்மை இருக்கிறது. இது சருமத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது.
பொடுகுத் தொல்லை, நீளமாக நகம் வளர்த்தல், முறையற்ற உணவுப்பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
குளிப்பதற்கு அமிலத்தன்மை மற்றும் அதிக உப்பு இல்லாத சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையால், சருமத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி, பருக்கள் வராமல் தடுக்கும்.