முகநூலில் பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வஞ்சிபாளையம் பகுதியில் திருமணமான 25 வயது பெண்ணுக்கு வாலிபர் ஒருவர் முகநூல் மூலமாக அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் தொந்தரவு செய்த வாலிபர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் வசிக்கும் சிவா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் அந்த பகுதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் சிவாவிடம் நடத்திய விசாரணையில் வஞ்சிபாளையம் பகுதியில் வசிக்கும் பெண்ணை முகநூல் மூலம் தொந்தரவு செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சிவாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.