முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். இது தொடர்பாக கட்சி தொண்டர்களிடம் அவர் கூறியதாவது. “டெல்லியில் திராவிட கோட்டை தலை நிமிரும். அங்கு நாளை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளேன்.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு, வர வேண்டிய வருவாய் வெள்ள நிவாரணம் உள்ளிட்ட மாநில நிவாரணத்திற்காக விவாதிக்க உள்ளேன். அமீரக பயணம் வெற்றி அடைந்த நிலையில் தற்போது அடுத்த பயணமாக தலைநகரை நோக்கி அமைகிறது” என்று கூறியுள்ளார்.