Categories
மாநில செய்திகள்

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள்…. நலம் விசாரித்த முதலமைச்சர்…. வெளியான தகவல்….!!!

இலங்கை நாடு தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் இலங்கை தமிழர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டை நோக்கி கடல்மார்க்கமாக வர தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையிலிருந்து வரும் மக்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்  வழிகாட்டுதலின் பெயரில் ராமநாதபுரம் மற்றும் திருச்சி  உள்ளிட்ட தமிழகத்தின்  29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் 19, 223 இலங்கை தமிழர்கள் குடும்பங்களைச் சேர்ந்த 58, 547 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்  முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களுடன் பேசியுள்ளார். அப்போது அவர்களிடம் அத்தியாவசிய தேவை மற்றும் நலன் குறித்து விசாரித்தார்.

இந்நிகழ்வில்  பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் டி.ஐகந்தாதன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ராமநாதபுரம் கலெக்டர் சங்கர் லால் குமாவத், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |