Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இது கட்டாயம் அணிய வேண்டும்” வெளியில் சுற்றி திரியும் பொதுமக்கள்…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!

முகக்கவசம் அணியாத 330 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்படுபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி காவல்துறையினர் பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 330 பேருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் தொற்று பரவாமல் நம்மளையும் பிறரையும் காப்பாற்ற வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |