தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விதார்த். சில தோல்வி படங்களுக்குப் பிறகு கதையில் கவனம் செலுத்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கியுள்ளார். கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை போன்ற படங்கள் நல்ல வரவேற்பைனைப் பெற்றது. தற்போது அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆற்றல் திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. இந்த படம் நகரில் உள்ள பணக்காரர் வீடுகளை நோட்டம் விட்டு பணம் பொருட்களை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடித்த பின் வீட்டில் உள்ளவர்களை கொலை செய்கிறார்கள். இந்த கொலை கொள்ளைகளை பற்றி போலீசார் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மெக்கானிக் சார்லஸ் சார்லியும் அந்த கொலைகார கொள்ளையர்களிடம் சிக்குகிறார்.
மகன் வித்தார்தின் கனவு திட்டத்தை நிறைவேற்ற 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி வரும் வழியில் அந்த பணத்துக்காக அவரை கொள்ளையர்கள் கொலை செய்து விடுகின்றனர். அப்பாவின் மரணம் மகன் வித்தார்த்தை பாதிக்கிறது. தன் அப்பாவை கொலை செய்த கொள்ளையர்களை பழிவாங்குவேன் என்று விதார்த் சபதம் எடுக்கிறார். அவருடைய சபதம் நிறைவேறியதா? அவரின் கனவு திட்டத்தை விதார்த் நிறைவேற்றினாரா? என்பது படத்தின் மீதி கதையாகும். இதனைத் தொடர்ந்து அதிரடி நாயகனாக வரும் விதார்த் அவரின் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார். கொலை செய்யப்பட்ட அப்பா சார்லஸ் மடியில் போட்டுக்கொண்டு கதறும் காட்சியில் பார்வையாளர்களை கண்கலங்க வைக்கிறார். சண்டை காட்சியில் ஆக்ரோஷம் காட்டி ரசிக்க வைக்கிறார். இவரின் இயல்பான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இதனையடுத்து கதாநாயகியாக நடித்திருக்கும் ஸஷிரிதாரவ் அவரின் முக வசீகரத்தால் அனைவரின் கவனம் ஈர்க்கிறார்.
சார்லி மகன் மீது பாச மழை பொழியும் சீன்களில் நெகிழ வைக்கிறார். கொள்ளையர்களின் தலைவனாக வம்சி கிருஷ்ணா வழக்கம்போல் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். அதிரடி திகில் படமாக கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் கே.எல். கண்ணன். கொலை கொள்ளை காட்சிகளில் சற்று விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார். புதுவிதமான கனவை பார்வையாளர்களுக்கு கடத்த நினைத்து பாராட்டுகளை பெறுகிறார். மேலும் உயர்தர கனவை நினைவாக்கும் முயற்சி மிகவும் சாதாரணமாக காட்சிப்படுத்தி அலுப்பை ஏற்படுத்தி இருக்கிறார். உதாரணத்திற்கு படத்தின் ஒரு இடத்தில் அவர் கண்டுபிடிக்கும் புதுவிதமான காரை வழிநடத்தும் வகையில் கட்டி இருக்கும் அணைக்கட்டை மிகவும் சாதாரணமாக கையில் கட்டி பார்வையாளர்களே சோர்வடைய செய்திருக்கிறார். அஸ்வின் ஹேமந்த் இசையில் பாடல்கள் எடுபடவில்லை. கொள்ளையர்களும், கொலைகளும் நடைபெறும் இரவு நேரங்களில் ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார் திகிலாக பதிவு செய்து இருக்கிறார்.