Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

500 ரூபாய் அபராதம்…. வாக்குவாத்தில் ஈடுபட்ட பெண்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

முககவசம் அணியாமல் வந்த பெண்ணிற்கு சப்-இன்ஸ்பெக்டர் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சாலைகளில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக காவல்துறையினர் முககவசம் அணியாமல் வருபவர்களை கண்டித்து அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் செட்டியப்பனூர் பகுதியில் போக்குவரத்து காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தீவிர வாகன சோதனையிலும் மற்றும் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு தம்பதியை நிறுத்தி இருவரில் ஒருவர் முககவசம் அணியாததால் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென சப்-இன்ஸ்பெக்டர் அவர்களிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் கொரோனா காலத்தில் என்னால் அபராதம் செலுத்த முடியாது எனக் கூறி சப்-இன்ஸ்பெக்டரிடம் நீண்ட நேரம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் 100 ரூபாய் மட்டுமே அபராதம் செலுத்தி விட்டு அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |