ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 14-வது ஆண்டாக இன்று போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண்டுகளாக முன்னிலையில் உள்ளார். மேலும் இன்று போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 92.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இதையடுத்து இரண்டாவது இடத்தை 74.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கவுதம் அதானி பிடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து 31 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான ஷிவ் நாடார் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் முதல் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 18 பில்லியன் டாலர்களுடன் ஓபி ஜிண்டால் குடும்பத்தின் தலைவி சாவித்திரி ஜிண்டால் மீண்டும் சேர்ந்துள்ளார்.