இந்திய நாட்டிலிருந்து அமீரகத்திற்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள பல நகரங்களிலிருந்து அமீரகத்திற்கு கடந்த 5 ஆம் தேதி பலவிதமான கொரோனா குறித்த கட்டுப்பாடுகளுடன் கூடிய விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏர் இந்தியா எக்பிரஸ் நிறுவனம் அமீரகத்திற்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கென முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது அமீரகத்திற்கு செல்ல விரும்பும் பயணிகள் தாங்கள் வைத்திருக்கும் விசாவை பொறுத்து அந்தந்த நாடுகளினுடைய அரசு அனுமதியை சம்பந்தப்பட்ட துறைகளில் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் அமீரகம் செல்ல விரும்பும் பயணிகள் காலதாமதமின்றி விமான நிலையத்திற்கு 6 மணி நேரம் முன்னதாகவே வர வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஏனெனில் விமான நிலையத்தில் வைத்து பயணிகளுக்கு ரேபிட் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படவுள்ளது என்பதனாலாகும்.