சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா இரு நாடுகளும் லண்டனில் வைத்து முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளும் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளனர். அந்த ஒப்பந்தத்தில் சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் பிரித்தானியர்கள் மற்றும் அந்நாட்டிற்கு வருகை புரியும் பிரித்தானியா பயணிகள் தங்களின் மருத்துவம், ஓய்வு ஊதியம், மற்றும் சமூக நலப்பாதுகாப்பு போன்றவற்றின் பலன்களை சுவிட்சர்லாந்திலும் பெறமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று லண்டன் சென்ற சுவிட்சர்லாந்து உள்துறை அமைச்சரான Alain Berset இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். மேலும் மக்கள் தங்களின் பங்களிப்பை ஏதாவது ஒரு நாட்டில் வழங்கினால் போதும்.
அதாவது கட்டணங்களை ஏதாவது ஒரு நாட்டில் மட்டும் செலுத்தினால் போதுமானது என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் பிரெக்சிட்டினால் பணியாளர்கள், சுற்றுலா வருபவர்கள் மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுவிட்சர்லாந்தில் வாழும் பிரித்தானியர்களும், பிரித்தானியாவில் வாழும் சுவிட்சர்லாந்து மக்களும் பலன் பெற முடியும். குறிப்பாக 77,500 சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா குடிமக்கள் இரு நாடுகளிலும் வாழ்கிறார்கள் என்பதால் இருவருக்கும் பொருந்தும் ஒப்பந்தமாக உள்ளது.